top ten news today in Tamil march 12 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

top ten news today in Tamil march 12 2024

வந்தே பாரத் ரயில் சேவை!

சென்னை – பெங்களூரு இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 12) துவக்கி வைக்கிறார்.

தேர்தல் பத்திரம் திட்டம்!

தேர்தல் பத்திர திட்டத்தில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை இன்றைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

அதிமுக போராட்டம்!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

ரமலான் நோன்பு!

தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது.

திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார செயல்திட்டங்கள் வகுப்பது குறித்து திமுக சொற்பொழிவாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகர் ஓட்டல் அகார்டில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா தலைமையில் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 661-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மோதல்!

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை, பெங்களூரு மோதல்!

இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நெல்லை சொதி

”தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது” : கர்நாடக அரசுக்கு எடப்பாடி கண்டனம்!

டிஜிட்டல் திண்ணை: பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?

’நல்ல வேள அது நடக்கல’ : அப்டேட் குமாரு

top ten news today in Tamil march 12 2024

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *