தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம்…