அரசியல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து அரசு மனு!
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 69 பேர் உயிரிழந்தனர்
இளம் மேயர் முதல் முதல்வர் வரை : யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்?
கவுன்சிலர், மேயராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ். 2014-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 122 இடங்களை பெற்றது. அப்போதுதான் பாஜக தலைமையில் மராட்டியத்தில் முதன்முறையாக ஆட்சியமைந்தது. முதல்வராக 44 வயதான தேவேந்திர ஃபட்னாவிஸ் நியமிக்கப்பட்டார். 2019 வரை முழுமையாக ஆட்சி செய்தார். மகாராஷ்டிராவில் முழுமையாக ஆட்சி செய்த இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றார். 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி […]
இந்தியா
உலக மக்கள் விரும்பும் நகரம்: இந்திய தலைநகருக்கு எத்தனையாவது இடம்?
உலகின் அதிக மக்களை கவரும் நகரமாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் 5வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய டெல்லிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற டேட்டா அனாலிசிஸ்ட் நிறுவனம் உலகின் மிகச்சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம், தொழில், சுற்றுலா, உள்கட்டமைப்பு வசதி , சுகாதாரம் , பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களை கொண்டு இந்த அளவீடு வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பாரீஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. சுற்றுலாவும், பேஷனும் பாரீஸ் முதலிடத்தை பிடிக்க காரணமாக […]
பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற தீர்மானம் : ஐ.நா சபையில் இந்தியா எடுத்த முடிவு!
கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்கிற ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடக்கும் மோதல் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் , கடந்த 3 ஆம் தேதி ‘பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு என்ற தலைப்பில் செனகல் நாடு ஒரு தீர்மானத்தை ஐ.நா. வில் கொண்டு வந்தது. வரலாற்று ரீதியாக பாலஸ்தீன நாட்டின் இறையாண்மையை ஆதரித்து வரும் இந்தியா, சமீபகாலமாக இஸ்ரேல் நாட்டுடன் ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட […]
தமிழகம்
சாம்சங் தொழிலாளர்கள் சங்க விவகாரம் : பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது ஆறு வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரினர். இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்தனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்திலும் குதித்தனர். இந்தநிலையில் […]
சரி கமப நிகழ்ச்சி வழியாக தர்ஷினி கிராமத்துக்கு கிடைத்த பஸ் போக்குவரத்து… எப்படி?
வாரந்தோறும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி . மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி திறமை வாய்ந்த இளம் பாடகர்களை தமிழகத்துக்கு அடையாளம் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடுபவர்கள் சோசியல் மீடியாவிலும் வைரலாகி விடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷினி. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மனப்பாக்கம் இவருடைய சொந்த ஊர். 60 முதல் 70 குடும்பங்கள் […]
டிரெண்டிங்
பியூட்டி டிப்ஸ்: பிளவுஸில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்!
சேலை வாங்குவதைவிட மேட்ச்சிங் பிளவுஸ் வாங்குவதில் அதிக நேரத்தைச் செலவிடும் பெண்களுக்கு பஃப் ஸ்லீவ் தற்போது டிரெண்டில் இருக்கிறது.
ஹெல்த் டிப்ஸ்: 50 வயதுக்கு மேல் அதிகரிக்கும் தொப்பை… தவிர்ப்பது எப்படி?
50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்கும் தொப்பை விழும். அதற்குக் காரணம், தசைகளின் அடர்த்தி குறைவதுதான் என்கிறார்கள் பிட்னஸ் பயிற்சியாளர்கள்.
சினிமா
நடிகர் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட அந்த நோய்… அமெரிக்கா சென்ற பின்னணி!
கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த 2021 ஆம் ஆண்டு மரணமடைந்தார். ராஜ்குமார் குடும்பத்தில் நடந்த இந்த இறப்பு திரையுலகை கலங்கடித்தது. புனித் போலவே அவரது மூத்த சகோதரரான சிவராஜ்குமாரும் கன்னட திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர், ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவராஜ்குமார் […]
கல்யாணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு டாக்டர், எம்.டி பட்டம் பெற்ற சிவகார்த்திகேயனின் சகோதரி!
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மிக முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து அந்த படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு துப்பாக்கி படம் போல் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையை முருகதாஸ் புது உச்சத்திற்கு கொண்டு செல்வாரா என எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே, அரசியலுக்கு செல்வதால் நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்யின் […]
விளையாட்டு
வினோத் காம்ப்ளி உடல்நிலை மோசமாக என்ன காரணம்? உண்மையை சொன்ன நண்பர்!
சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்கையில் அவரின் சிறுவயது பயிற்சியாளரான ரமாகாண்ட் அச்ரேக்கர் முக்கிய அங்கமாக இருந்தார். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய வினோத் காம்ப்ளி, ரமேஷ் பவார், சஞ்சய் பங்கர் உள்ளிட்ட பலரும் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான். கடந்த 2019ஆம் ஆண்டு ரமாகாண்ட் அச்ரேக்கர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். இதையடுத்து, மும்பையில் அவருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி பங்கேற்றனர். வினோத் காம்ப்ளி மேடையில் அமர்ந்திருந்ததை பார்த்த […]
1000 போட்டிகளுக்கு பிறகு, முதல் ரெட்கார்டு வாங்கிய ஜெர்மனி கோல்கீப்பர்!
ஜெர்மனி அணியின் கோல்கீப்பராக இருப்பவர் மனுவேல் நிவூவர். இவர் ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்முனிச் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 21 சீசன்களில் அந்த அணிக்காக 923 கிளப் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதோடு, ஜெர்மனி அணிக்காக 124 சர்வதேச போட்டிகளிலும் களம் கண்டுள்ளார். 38 வயதில் கிட்டத்தட்ட ஆயிரம் கால்பந்து போட்டிகளுக்கு மேல் விளையாடியும் ஒரு முறை அவர் நேரடி ரெட் கார்டு பெற்றதில்லை. இந்த நிலையில், முதன்முறையாக மனுவேல் நேரடி ரெட் கார்டு காட்டப்பட்டு […]