தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யவும், புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் ஊடக ஜனநாயகத்தைப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கவும் தொடங்கப்பட்ட நிறுவனம் Annamalai Digital India Pvt. Ltd. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இதன் முதல் வெளியீடு தமிழின் முதல் மொபைல் பத்திரிகை மின்னம்பலம் minnambalam.com ஆகும்.
* செய்திகளை அவசர கதியில் வழங்காமல் துல்லியமாகவும், தெளிவாகவும், சரியாகவும் வழங்குவதே மின்னம்பலத்தின் நோக்கம்.
* செய்திகளைப் பொறுத்தவரை, அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள், சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.
* சிறப்புக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறை சார்ந்த கட்டுரைகளும் தினமும் வெளியிடப்படும். அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை, அறிவியல்,பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகள் சார்ந்த விமர்சனங்கள், அலசல்கள், மதிப்பீடுகள், அறிமுகங்கள், பாராட்டுகள் அந்தந்தத் துறைசார்ந்த விமர்சகர்கள், வல்லுநர்கள், நிபுணர்களிடமிருந்து பெறப்பட்டு வெளியிடப்படும்.
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள: editor@minnambalam.com
அ.காமராஜ், ஆசிரியர், நிர்வாக இயக்குநர்
இதழியல் துறையில் 1988லிருந்து தீவிரமாக செயல்பட்டு வருபவர். ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக உரத்த குரல் கொடுப்பவர். சாமானிய மக்கள் பார்வையில் செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுபவர். சமூக, அரசியல் துறைகளில் சிறந்த புலனாய்வுக் கட்டுரைகள் எழுதி, தமிழ் புலனாய்வுத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தைக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர். தமிழ் ஊடகத்தில் புதிய மடைமாற்றம் ஏற்படுத்த Annamalai Digital India Pvt. Ltd. நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
ஜெயசுதா காமராஜ், இயக்குநர்
ஊடகத்தில் உளவியலின் பங்கை நன்கு அறிந்தவர். உளவியல் ஆலோசனை வழங்குவதிலும், உளவியல் பயிற்சிப் பட்டறை நடத்துவதிலும், உளவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். மனநல ஆரோக்கியத்தை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டுசெல்லும்
முயற்சியாக பல ஊடக நிகழ்வுகளில் பங்குகொண்டு சமூகப்பணி ஆற்றி வருகிறார்.
கண்ணன், பொது மேலாளர்
இளநிலைப் பொறியாளர் பட்டம். கணினி செயலித் துறையில் 2000ஆம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் சோர்வின்றி செயல்பட்டு வருகிறார்.
வேல்முருகன், ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்
வாசிப்பதே இவர் மூச்சு
ராகவேந்திரா ஆரா, பொறுப்பாசிரியர்
ஊடகத் துறையில் 2001ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார். அரசியல், சமூகம், கலை போன்ற துறைகளில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வருகிறார். இலக்கிய தாகமும் கொண்டவர். ஆவணப் படங்கள், குறும்படங்களுக்குப் பாடல்களும் எழுதி வருகிறார்.
எம்.பி.காசிநாதன், துணை ஆசிரியர்
1994ஆம் ஆண்டிலிருந்து ஊடகத் துறையில் இயங்கி வருகிறார். சமூகத்தில் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருபவர். அரசியல், சமூகம், குற்றவியல் சார்ந்து இவர் முன்வைக்கும் செய்திகள் வாசகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றன.
ப.கவிபிரியா, முதுநிலை உதவி ஆசிரியர்.
இளங்கலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர். சமூகம், பெண்கள், குழந்தைகள், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளில் தனித்த கண்ணோட்டத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து சளைக்காமல் எழுதி வருகிறார்.
மணிகண்டன், உதவி ஒளிப்பதிவாளர்
நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பவர்.