ஜனநாயகன் பட வழக்கு : கேவிஎன் புரொடக்சன்ஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

By Kavi

|

Published on 15 Jan 2026, 11:23 AM

ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனநாயகன் பட வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன் மேல்முறையீடு செய்தது.

ADVERTISEMENT

அதில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த மனு இன்று (ஜனவரி 15)  நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகுகுங்கள் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel