Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • சினிமா
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

முகேஷ் அம்பானியின் மெகா திட்டம்: முழுவீச்சில் ரெடியாகும் ஜியோ IPO!

By Santhosh Raj Saravanan

|

Published on 19 Mar 2026, 5:23 AM

Mukesh Ambani Joins hands with six banks for Jio IPO
Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தனது ஜியோ (Jio) மெகா ஐபிஓ-விற்காக முக்கியமான வேலைகளை முடித்துள்ளார். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது தொலைத்தொடர்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் முன்மொழியப்பட்ட பங்கு விற்பனைக்காக ஆறு வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் பல ஆலோசகர்கள் விரைவில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ:

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரிய வயர்லெஸ் ஆபரேட்டருக்குச் சொந்தமான இந்நிறுவனம், இந்த ஐபிஓ-விற்காக போஃபா செக்யூரிட்டீஸ், சிட்டிகுரூப் இன்க்., கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க்., ஜேஎம் ஃபைனான்சியல் லிமிடெட், கோடக் மஹிந்திரா கேப்பிட்டல் கோ மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜியோ, இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்களிப்பாக (ஐபிஓ) வரலாறு படைக்கக் காத்திருக்கிறது.

ADVERTISEMENT

இது, முகேஷ் அம்பானியின் முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஒரு முக்கியப் பிரிவுதான். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் வெளியிடும் முதல் ஐபிஓ ஆகும். பட்டியலிடுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த பிறகு, இந்த ஐபிஓ மேலும் வேகம் பெற்றது. பெரிய வெளியீட்டாளர்கள் இப்போது தங்கள் பங்குகளில் குறைந்தபட்சம் 2.5 சதவீதத்தை விற்கலாம்.

DHRP எப்போது தாக்கல் செய்யப்படும்?

ADVERTISEMENT

வங்கியாளர்கள் முன்னதாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் மதிப்பை 170 பில்லியன் டாலர் வரை மதிப்பிட முன்மொழிந்திருந்தனர். அதாவது குறைந்தபட்சத் தேவையின் அடிப்படையில் நிறுவனம் சுமார் 4.3 பில்லியன் டாலரைத் திரட்ட முடியும். இறுதி நிபந்தனைகள் முடிவு செய்யப்பட்டவுடன், நிறுவனம் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடங்கும். இந்த சாத்தியமான பங்களிப்பின் நிபந்தனைகளும் காலக்கெடுவும் மேலும் மாறலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • TVK-Vijay

    நிழலுக்கு அப்பால்…. தவெகவின் நுண்ணரசியல்

    5 Nov 2026, 2:40 PM

  • TVK-Drug Case

    தவெக ’மாஜி’ நிர்வாகி பூபாலன் பிடிபட காரணமான ரூ.3,000 கோடி போதை பொருள் கடத்தலில் தாவூத் கும்பல்- ஆயுத கடத்தலுக்கும் சதி? ஷாக் தகவல்!

    6 Nov 2026, 8:13 AM

  • Southern Railway-Diwali

    ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு!

    6 Nov 2026, 6:24 AM

  • tnpsc Group 4 exam

    TNPSC குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நவ.8 கடைசி நாள்

    6 Nov 2026, 4:54 AM

  • எல்லாம் லியோ ஸ்டைல்னு சொல்றாங்க : அப்டேட் குமாரு

    6 Nov 2026, 12:00 AM

  • Fishermen-Kasimedu

    காசிமேடு துயரம்: மீனவர்கள் உயிரோடு விளையாடும் விஜய் ‘சர்க்கார்’- உதயநிதி கண்டனம்

    5 Nov 2026, 10:30 PM

  • மாணவன் அகிலன் பெற்றோருக்கு கி.வீரமணி நேரில் ஆறுதல்

    5 Nov 2026, 10:18 PM

  • Madurai-Misa Pandian

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மிசா பாண்டியன் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்!

    5 Nov 2026, 10:06 PM

  • ஜெகன்மோகன் இல்ல திருமண விழா: முதல்வர் விஜய், திரிஷா நேரில் வாழ்த்து!

    5 Nov 2026, 9:42 PM

  • நேரு ஸ்டேடியத்தில் விசாரணை நடத்த வேண்டும் : செந்தில் பாலாஜி வழக்கில் கோரிக்கை!

    5 Nov 2026, 8:21 PM

  • Kasimedu-Fishermen-CM Vijay

    காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம்- முதல்வர் விஜய்

    5 Nov 2026, 8:14 PM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus