Update kumaru March 11-2024
இன்னைக்கு சாயங்காலம் ஜூஸ் கடைக்கு வந்த பாபு, அவன் பாக்கெட்ல இருந்த அம்புட்டு நோட்டையும் கடைக்காரன் கிட்ட கொடுத்து அவன, ஜிபேல காசு மாத்தி விட சொல்லிட்டு இருந்தான்.
அங்க இருந்த எல்லோரும் அவன புரியாம பாக்க, ’ஏலே எதுக்கு இப்போ இருக்குற நோட்டெல்லாம் கொடுத்து ஜிபேல போட சொல்ற?’னு அவன்ட போய் கேட்டேன்.
அதுக்கு அவன், “விசயம் தெரியாம இருக்கீயல. இன்னும் கொஞ்சம் நேரத்துல மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற போறாராம்… அதான் மறுபடியும் நோட்டு எதும் செல்லாதுனு சொல்லிட்டாருனா… அதான் இப்படி”னு சொன்னான்.
சரிதான்னு திரும்பி பாத்தா ஜூஸ் கடைக்கு வந்தவன் எல்லோரும் கையில இருக்க நோட்ட ஜிபேல மாத்த கியூல நிக்கிறானுவ.
ஒரு விஷயம் என்ன புரிஞ்சதுனா, ‘மோடி 8 வருஷத்துக்கு முன்னாடி நாட்டு மக்களுக்கு முன்னாடி உரையாற்றல.. அம்புட்டு பேரையும் பீதில உறைய வச்சிருக்காரு…
சரி நானும் எதுக்கும் லைன்ல நிக்கிறேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
வீட்டில் விருந்தினர்கள் வரும்போது காபி , டிபன் கொடுப்பதற்கு முன்
‘வைஃபை பாஸ்வேர்ட் ‘ பரிமாறப்படுகிறது
சரவணன். 𝓜
உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு கெடு விதித்துள்ளதை பார்க்கும் போது “உங்களை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான் டா” என்ற சினிமா வாசகம் நினைவுக்கு வருகிறது!
கோழியின் கிறுக்கல்!!
சுப்ரீம் கோர்ட்டு சொல்லியே SBI இவ்வளவு எதிர்ப்பு காண்பிக்கிறாங்கன்னா,
நம்மை போன்ற சாமான்யர்களை எப்படி நடத்துவார்கள்!?
Kirachand
பாராளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம்! – ஓபிஎஸ்
விருப்பு மனு வாங்க கூட்டம் வருமாண்ணே?
வரும்… ஆனா வராது!
நெல்லை அண்ணாச்சி
காசி விசுவநாதர் கோவிலில் .,..மோடிஜி
# கடைசி நேரத்தில்..” சங்கரா……சங்கரா.”!
ச ப் பா ணி
பதில்கள் இருவகை
நாம் சொல்ல நினைத்த பதில்,
அவர்கள் கேட்க நினைத்த பதில்
balebalu
தேர்தல் தள்ளி போவது அந்த காலம்
தேர்தல் ஆணையரே விலகி போவது இந்த காலம்
மயக்குநன்
‘சைக்கிள்’தான் தமாகாவின் வெற்றிச் சின்னம்!- ஜி.கே.வாசன்.
ஆமாமா… மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ‘ஓட்டுறதுக்கும்’ வசதியா இருக்கும்..!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்கள் தர வேண்டும் ~ உச்சநீதி மன்றம்
# SBI பி லைக்:
ம்ஹூம்.. இது வேலைக்கு ஆவாது, மினிமம் பேலன்ஸ் வைக்கலேன்னு இந்த நீதிபதி அக்கவுன்ட்ல நாளைக்கு ஆயிரம் ரூபாய் பைன் தீட்டிறவேண்டியது தான்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தலுக்கு முன்பாக ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்… காரணம் பாஜகவா? என்ன நடக்கிறது?
தேர்தல் நேரத்தில் சிஏஏ அமல் : ஸ்டாலின், பினராயி, மம்தா கடும் எதிர்ப்பு!
Update kumaru March 11-2024
திரு balebalu. பிரதமர் வெள்ளத்துக்கு வந்தாரான்னு கேட்டிங்களே.. இங்க ஒருத்தரு அதே வெள்ளத்துல மக்களை பாக்காம கூட்டணி பேச போனவர பத்தி Memes போடுங்களேன் பாப்போம்