விஜய்யின் “The GOAT” இசை வெளியீட்டு விழா எங்க தெரியுமா?

சினிமா

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் The GOAT (The Greatest of All Time).

இது விஜய்யின் 68 வது படம். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் 25 வது படம்.

இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ” விசில் போடு” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.

The GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும்,

சிறப்பு விருந்தினராக ஒரு முக்கிய பிரபலம் கலந்து கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Sci Fi ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் விஜய்யின் The GOAT படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் The GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக விஜய் மற்றும் படக்குழு அமெரிக்கா சென்றனர்.

வரும் செப்டம்பர் 05 ஆம் தேதி The GOAT படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் தளபதி 69 படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளார் என்றும் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வசூல் வேட்டையில் அரண்மனை 4… தாக்குப் பிடிக்குமா கவினின் ஸ்டார்!

பாடகர் வேல்முருகன் கைதாகி விடுவிப்பு – என்ன நடந்தது?

சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்: 87.98% தேர்ச்சி!

மீண்டும் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *