தற்போது இருக்கக்கூடிய பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஏர்டெல். பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனமானது, ஐந்து அட்டகாசமான ப்ரீபெய்டு திட்டங்களை கைவசம் வைத்துள்ளது.
இந்த ரீச்சார்ஜ் திட்டங்களில் ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், விங்க் மியூசிக், ப்ரீ ஹலோ டியூன்ஸ் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
ஏர்டெல்லின் ஐந்து ப்ரீபெய்டு திட்டங்கள் என்னென்ன?
1. ரூ.499 ப்ரீபெய்டு திட்டம்
2. ரூ.699 ப்ரீபெய்டு திட்டம்
3. ரூ.869 ப்ரீபெய்டு திட்டம்
4. ரூ.999 ப்ரீபெய்டு திட்டம்
5. ரூ.3359 ப்ரீபெய்டு திட்டம்
1. ரூ.499 ப்ரீபெய்டு திட்டம்
28 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டமாகும். ஒரு நாளைக்கு 3GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகியவை கிடைக்கும்.
கூடுதல் நன்மைகளாக 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் ரீச்சார்ஜ் திட்டம் உள்ளவரை விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹலோடியூன்ஸ் போன்ற நன்மைகளும் அடங்கும்.
2. ரூ.699 ப்ரீபெய்டு திட்டம்
இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டமாகும். இதிலும் மற்ற திட்டங்களைப் போலவே ஒரு நாளைக்கு 3GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகியவை கிடைக்கும். கூடுதலாக 56 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே, விங்க் மியூசிக், ப்ரீ ஹலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் ஆகியவையும் கிடைக்கும்.
3. ரூ.869 ப்ரீபெய்டு திட்டம்
84 நாட்கள் வேலிடிட்டி வழங்கக் கூடிய இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கூடுதலாக 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். விங்க் மியூசிக், ப்ரீ ஹலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் ஆகியவையும் கிடைக்கும்.
4. ரூ.999 ப்ரீபெய்டு திட்டம்
84 நாட்கள் வேலிடிட்டி வழங்கக் கூடிய இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகியவற்றுடன் 84 நாட்களுக்கு செல்லுபடியாகக் கூடிய அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே, விங்க் மியூசிக், ப்ரீ ஹலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் ஆகியவையும் அடங்கும்.
5. ரூ.3359 ப்ரீபெய்டு திட்டம்
365 நாட்கள் வேலிடிட்டி வழங்கக் கூடிய இந்த திட்டத்தில் தினமும் 2.5 GB டேட்டா அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற நன்மைகளும், கூடுதலாக 365 நாட்களுக்கான ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்கிரிப்ஷன், எக்ஸ்ட்ரீம் ப்ளே, விங்க் மியூசிக், ப்ரீ ஹலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் போன்றவையும் கிடைக்கும்.
ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை அனைத்து விதமான ப்ரீபெய்டு திட்டங்களையும், சில கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லியில் கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டு செல்லப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட்
வசூல் வேட்டையில் அரண்மனை 4… தாக்குப் பிடிக்குமா கவினின் ஸ்டார்!
பாடகர் வேல்முருகன் கைதாகி விடுவிப்பு – என்ன நடந்தது?
மம்மூட்டியின் மாஸ்… ராஜ் பி ஷெட்டியின் மிரட்டல்..”டர்போ” டிரைலர் எப்படி..?