டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

புதிய நீதிமன்ற கட்டடம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிமன்றம் மற்றும் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று ( செப்டம்பர் 4 நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திரைப்பட விருது வழங்கும் விழா

இன்று( செப்டம்பர் 4) மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் 2009 முதல் 2014 வரை தேர்வு செய்யப்பட்ட தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது

மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் முழுவதும் இன்று ( செப்டம்பர் 4)  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்!

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று (செப்டம்பர் 4)  சூப்பர் 4 இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை

நேற்று (செப்டம்பர் 3) நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 4) 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெற்றிமாறன் பிறந்தநாள்

இன்று (செப்டம்பர் 4)  தமிழ் திரையுலகின் தனித்துவமான முன்னணி இயக்குனர் வெற்றி மாறனுக்கு 47-வது பிறந்தநாள். வெற்றி மாறன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

வானிலை நிலவரம்

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 4)  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.

இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது- போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 4)  பாலவாக்கம் கடற்கரை, பட்டனம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று (செப்டம்பர் 4)  மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அடையாறிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள் ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம்.

என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக அன்புமணி போராட்டம்!

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதாக சொல்லி என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் இன்று காலை 11 மணிக்கு பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ப்ராங்க் வீடியோக்களுக்கு தடை விதித்த போலீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *