டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று (மே 8) இரண்டாவது நாளாக திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. திருநெல்வேலியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகிறார்.

கர்நாடகா தேர்தல் பரப்புரை!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

விடுமுறை கால பயிற்சி முகாம்!

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கான விடுமுறை கால பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.

டிக்கெட் விற்பனை!

மே 10-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 1220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 352-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வங்ககடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொல்கத்தா, பஞ்சாப் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பின்னணி பாடகி!

CSKvsDC டிக்கெட் விற்பனை: அதிரடி மாற்றம் செய்த சி.எஸ்.கே நிர்வாகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *