இந்திய பங்குச் சந்தையில் ஈக்விட்டி வர்த்தக குறியீடுகள் கடந்த வெள்ளியன்று உயர்வுடன் முடிவடைந்தாலும், நடப்பு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம் போன்ற காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை கடந்த எட்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் மோசமான வர்த்தகத்தை பதிவு செய்தது.
கடந்த வார்த்தைப் பொறுத்த வரையில் வர்த்தக அடிப்படையில் மிகவும் ஆக்டிவாக உள்ள பங்குகள் பட்டியலில் HDFC வங்கி, கோடக் வங்கி, எஸ்பிஐ வங்கி, ஆர்ஐஎல், டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் அதிக அளவிலான எண்ணிக்கையில் வர்த்தகமாகின.
அதேநேரத்தில் Jupiter Wagons, Hindustan Zinc, Vijaya Diagnostic, Honeywell, Polycab India, Astral மற்றும் V-Guard நிறுவன பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் மேற்கண்ட பங்குகள் அதிக அளவில் வர்த்தகம் ஆகியதால் இந்த பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தது.
மேலும் LTIMindtree, Berger Paints, Syngene International, Dalmia Bharat, Ramco Cements, Tata Technologies, Zee Entertainment Enterprises ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த பங்குகள் 52 வார வீழ்ச்சியை எட்டியது.
மே 10 வரையிலான காலத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதவிட்டாளர்கள் (FPI) சுமார் 17,083 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறி உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 72,664.47 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 22,055.20 புள்ளிகளில் முடிவடைந்தது.
இந்த வாரம் தேசிய பங்குச்சந்தையில் Go Digit General Insurance, Veritaas Advertising, Mandeep Auto Industries,Indian Emulsifier,Quest Laboratories,HOAC Foods IndiaRulka Electricals ஆகிய 7 நிறுவனங்களின் IPO விற்பனைக்கு வர உள்ளன, 12 புதிய நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி மற்றும் பார்தி ஏர்டெல், ஸ்டேட் வங்கி, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பங்குகள் இந்த வாரம் உயரும் என கணிக்கப்படுகிறது.
திங்கள்கிழமை இன்று (மே 13) நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடக்க உள்ள 96 தொகுதிகள் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகள் பட்டியலில் உள்ளதால் இதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிமென்ட் நிறுவனமான ஜேகே சிமென்ட் தனது நான்காவது காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 220 கோடி ரூபாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஒரு பங்கிற்கு 20 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்து உள்ளது.
மார்ச் வரையிலான காலாண்டில் Abbott India அபோட் இந்தியா நிறுவனத்தின் லாபம் 24.1 சதவீதம் உயர்ந்து ரூ.287.1 கோடியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Astral,Hero MotoCorp,Indus Towers,EIHotel,Bata India ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரத்தில் அதிக லாபம் கொடுக்கும் என்று சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த வாரத்தில் Tube Investments of India, Aditya Birla Capital, BASF India, Shree Cements, Radico Khaitan, V-Mart Retail, Power Finance Corporation, Rail Vikas Nigam, LIC Housing Finance, Granules India, Trident, Hindustan Aeronautics, Biocon, Crompton Greaves Consumer Electrical, JSW Steel, Atul Auto, NHPC, TV Today Network, and Mindteck (India) ஆகிய நிறுவனங்கள் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இந்நிறுனங்களின் பங்குகள் அதிக அளவில் வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் பீவரேஜஸ், ஜொமாட்டோ, ஜிண்டால் ஸ்டீல் மற்றும் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.
மணியன் கலியமூர்த்தி
குறைந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?
முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை மறைவு!