Edappadi condemns Karnataka government

”தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது” : கர்நாடக அரசுக்கு எடப்பாடி கண்டனம்!

அரசியல்

தற்போது இருக்கும் சூழலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். Edappadi condemns Karnataka government

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாண்டியாவில் ரைதா ஹிதரக்ஷனா சமிதியினர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக இன்று (மார்ச் 11) செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில்,

“ கர்நாடகாவில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் எங்கள் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் சிரமம் இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

பா.ஜ.க தலைவர்கள் மனநிலை குழம்பிவிட்டது. தற்போது இருக்கும் சூழலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை” என்று அவர் பேசியிருந்தார்.

கோடைக்காலம் இன்னும் துவங்கவே இல்லை அதற்குள் தண்ணீர் திறந்துவிட போவதில்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது தமிழக டெல்டா விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் மற்றும் கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி ஆகியோரின் கடும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்

இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் தேசிய கட்சிகளின் வரலாறானது இரட்டை நிலைப்பாடு மற்றும் பாசாங்குத்தனமான தன்மையை பிரதிபலிக்கிறது.

மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து தி.மு.க. தொடர்ந்து ஊமையாக இருந்து வருகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளை உறுதி செய்வதில் தொடர்ந்து அதிமுக உறுதியாக உள்ளது. தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி முழுவதையும் பாலைவனமாக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம்.

தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, காவிரி அன்னை மீதான நமது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உதயநிதி, கமல் வரிசையில் விஜய்

’நல்ல வேல அது நடக்கல’ : அப்டேட் குமாரு

Edappadi condemns Karnataka government

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *