தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக இந்த கட்டிட பணிகள் பல ஆண்டுகளாக நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது.
இந்த நடிகர் சங்க கட்டம் நிறைவு பெறுவதற்கு ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் என பலர் வழங்கி வருகின்றனர்.
இதன்படி, அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி செய்தார். தொடர்ந்து, நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் மற்றும் நெப்போலியன் ஆகியோர் தலா ரூ.1 கோடியும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சமும் நடிகர் சங்க கட்டிட பணிக்காக வழங்கினர்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு என ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுத்தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ், நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
இந்த நிதியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் நடிகர் தனுஷ் வழங்கினார்.
தனுஷிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அரசை எதிர்த்து போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு – காரணம் இதுதான்!
இஸ்லாமிய பெண்களின் புர்காவை விலக்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர்: தேர்தல் ஆணையம் ஆக்ஷன்!