சென்னை, பெங்களூரு 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் செல்லலாமா? எப்படி?

Published On:

| By Selvam

2024 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் சுற்று ஆட்டங்களில் இன்னும் 8 லீக் போட்டிகளே மீதமுள்ளது.

இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கான 4 இடங்களில், இதுவரை ஒரு அணி மட்டுமே தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 9 போட்டிகளில் வெற்றி பெற்று, 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இதை தொடர்ந்து, 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிட்டத்தட்ட பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அதன் இடமும் 100% உறுதியாகிவிடும்.

 

முன்னதாக, மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன.

இந்நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கடுமையாக மோதிக்கொள்கின்றன.

இவற்றில், சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளின் நெட் ரன்-ரேட் பாசிட்டிவாக உள்ளதால், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில், முன்னதாக சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறினால் மட்டுமே பெங்களுரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்த நிலையில், தற்போது இவை மட்டும் நடந்தால், 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முதலாவதாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தான் விளையாடவுள்ள அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்க வேண்டும். அந்த அணி தனது அடுத்த 2 போட்டிகளில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

அடுத்து, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி தனது அடுத்த 2 போட்டிகளில், ஒரு போட்டியில் கட்டாயம் தோல்வியடைய வேண்டும்.

இது மட்டும் நடக்கும் பட்சத்தில், சென்னை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூரு அணி சரியான ரன்கள் வித்தியாசத்தில் அல்லது பந்துகள் மீதமிருக்கும்போது வெற்றி பெற்றால், சென்னை மற்றும் பெங்களூரு என 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை இப்படி நடைபெற்றால், 2024 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளே மீண்டும் மோதிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கருடன்: சூரி ஆக்சன் மிரட்டல்… ரிலீஸ் தேதி இதோ!

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-வரை ரிமாண்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share