சென்னையில் விரைவில் தோனிக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டுவார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முட்டிமோதி வருகின்றன.
இந்தநிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்தியது.
சென்னையில் நேற்று போட்டி நடைபெற்ற போது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும், அதனால் அவர்கள் போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
சென்னை அணியின் கடைசி லீக் ஆட்டம் சொந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால், தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் சோகமாக கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
ஆனால், ரசிகர்களுக்கு தோனியின் பெயர் பொறித்த ஜெர்ஸி மட்டும் பந்துகளை சிஎஸ்கே நிர்வாகம் வழங்கியது.
இந்தநிலையில், இன்னும் சில ஆண்டுகளில் தோனிக்கு சென்னையில் கோவில் கட்டுவார்கள் என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
“சென்னையின் கடவுள் தோனி. இன்னும் சில ஆண்டுகளில் தோனிக்காக சென்னையில் கோவில் கட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பைகளை பெற்றுத் தந்த பெருமை அவரையே சேரும். அதேபோல சென்னை அணிக்கும் 5 கோப்பைகளை பெற்று தந்துள்ளார்.
சக விளையாட்டு வீரர்கள் மீது தோனி எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பார். அவர் ஒரு லெஜெண்ட். அதனால் தான் அவர் மைதானத்தின் உள்ளே நுழையும் போது ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்: 1 மணி நிலவரம்!
வாக்காளரை அடித்த எம்.எல்.ஏ… பதிலுக்கு பளார்விட்ட வாக்காளர் – வைரல் வீடியோ!