“இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள்” : வெற்றிமாறன் பதிலடி!

Published On:

| By Kavi

பொன் விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரஞ்சித்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரிலும் நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து தற்போது, “குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம்” என்ற படத்தை இயக்கி உள்ளார் ரஞ்சித்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு, கனல் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, “பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்” என்று கூறினார்.

இவரது பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, இயக்குநரும் நடிகருமான அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் நெல்லை பாளையங்கோட்டையில் பார்ப்பதற்காக சென்றிருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறனிடம் இயக்குநர் பிரவீன் காந்தி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், “இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது” என்று கூறினார்.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தென்காசி பகுதியில் நடைபெற்று வரும் விடுதலை இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்த பிறகு அடுத்த மூன்று மாதங்களில் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.

– கார்த்திக் ராஜா

17.7 கோடி வாக்காளர்கள்… தொடங்கிய 4ஆம் கட்ட தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு!

ஹெல்த் டிப்ஸ்: நீச்சலடிக்க போறீங்களா… இதிலெல்லாம் கவனம் தேவை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share