பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே 10 ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது.
ஸ்டார் படத்தின் முதல் நாளில் உலகளவில் 3.4 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் 2.8 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து 2 வது நாளில் இந்தியாவில் 4 கோடி ரூபாய், 3 வது நாளிலும் இந்தியாவில் 4 கோடி ரூபாய் வசூல் என தற்போது ஸ்டார் படம் இந்தியாவில் மட்டும் 3 நாட்களில் 10 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து உள்ளது.
கவினின் ஸ்டார் திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வந்தாலும் சுந்தர் சி- இன் அரண்மனை 4 திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அரண்மனை 4 படம் இந்தியாவில் 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
அரண்மனை 4 படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவு அதிக அளவில் இருப்பதால் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டி கொண்டிருக்கிறது. கவினின் ஸ்டார் படத்திற்கு பேமிலி ஆடியன்ஸின் ஆதரவு சற்று குறைவாக இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் ஸ்டார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்: 87.98% தேர்ச்சி!
மீண்டும் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா?