எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் துரை செந்தில்குமார்.
தற்போது அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கருடன். இந்த படத்தில் நடிகர்கள் சசிகுமார், உண்ணி முகுந்தன், சமுத்திரகனி, ரேவதி ஷர்மா, ரோஹிணி ஹரிப்ரியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் Glimpse வீடியோவில் சசி குமார் மற்றும் உண்ணி முகுந்தன் ஆகிய இருவருக்கும் மிகவும் விசுவாசமான அடியாளாக சூரி இருக்கிறார் என்பதை விளக்கம் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபில்ம் கம்பெனி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
இந்நிலையில், இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சூரியின் கருடன் படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு புது வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மிக பரபரப்பான ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கிறது. வீடியோவின் இறுதியில் சூரி ஆக்ரோஷமாக கத்துவது போல் இடம்பெற்றுள்ள காட்சி செம மிரட்டல்.
கருடன் படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் விடுதலை 2, கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-வரை ரிமாண்ட்!
புற்றுநோய் பாதித்தபோது… மனம் உடைந்த மனிஷா கொய்ராலா