வாக்காளரை அடித்த எம்.எல்.ஏ… பதிலுக்கு பளார்விட்ட வாக்காளர் – வைரல் வீடியோ!

அரசியல் டிரெண்டிங்

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்ட வாக்குச்சாவடியில், எம்எல்ஏ ஒருவர் வாக்காளரை தாக்க, பதிலுக்கு அந்த வாக்காளரும் எம்எல்ஏ-வை அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (மே 13) ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது.

இதை முன்னிட்டு காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சிவக்குமார், வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு வாக்காளரின் கன்னத்தில் அறைய பதிலுக்கு அந்த வாக்காளர் எம்எல்ஏ-வின் கன்னத்தில் அறைகிறார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை தாக்குகின்றனர். இதனை வரிசையில் நின்றுகொண்டிருந்த வாக்காளர்கள் தடுக்க முயல்கிறார்கள். 10 நொடி கொண்ட இந்த வீடியோ இணையத்தில் பரவி கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

எம்.எல்.ஏ. சிவக்குமார் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்ய முயன்றதாக தெரிகிறது.

அப்போது, வரிசையில் சென்று வாக்களியுங்கள் என்று அந்த வாக்காளர் சொன்னதால் எம்.எல்.ஏ சிவக்குமார் அவரை அடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்டு திட்டங்கள்!

விஜய்யின் “The GOAT” இசை வெளியீட்டு விழா எங்க தெரியுமா?

+1
1
+1
1
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0