சங்கி நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்…
அப்போம் அவரு, “நம்ம ஜி வேற லெவலுங்க… இன்னைக்கு பாட்னாவுல உள்ள ஒரு குருத்வாராவுல பக்தர்களுக்கு அவரே சப்பாத்தி ரெடி பண்ணி கொடுத்து பரிமாறியிருக்காருன்னு” ஆச்சரியமா சொன்னாப்ல…
அதுக்கு நான், “இங்க வந்தா வடை சுடுறாரு…அங்க போனா சப்பாத்தி உருட்டுறாரு… நல்லா இருக்குயா உங்க பிரச்சாரம்னு” கமெண்ட் அடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
லாங் லீவ் முடிந்து வேலைக்குப் போவது என்பது.. பெயில்ல வந்து திரும்ப ஜெயிலுக்கு போவது போல
வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஒதுக்கப்பட்டோம்..!” – வீதியில் இறங்கி போராடிய மக்களால் அதிர்ச்சி #இதுவும் இனி உரிமைப்போராட்டத்தில் சேர்த்திடுவாங்க
black cat
ஏன்டா நீ என்னமோ அக்னி வெயிலு ..அடிச்சு ஆளை உருக்குவேண்ணு சொன்ன, இங்கே என்னடா காலைல இருந்து ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லுன்னு இருக்க… (தமிழகத்தில் சில இடங்களில் மழை)
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வண்டி எவ்வளவு மைல் போகுதுன்னு சொல்றதுக்கு மைலேஜ்-ன்னு சொல்லனும். இதுவே எவ்வளவு கிலோமீட்டர்னு சொல்றதுக்கு கிலோமீட்டரேஜ்-ன்னு சொல்லனுமா..? # எதிர்காலத்தை பத்தி டீ குடிச்சுட்டே ஆழ்ந்த யோசனைல இருந்த போது திடுக்கென உதித்த திடீர் சிந்தனை..
வெண்பா
ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டியதில்லை..!” – அரவிந்த் கெஜ்ரிவால் #சேர்க்கப்படாத தேர்தல் வாக்குறுதி
ஏம்மா, இதுக்கு அந்த பையனை கத்தியை வச்சி அவன் நெஞ்சிலே குத்தி இருக்கலாம்… pic.twitter.com/7SkYIJe3lN
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) May 13, 2024
பள்ளிக் குழந்தைகள் வலசை போவது முழுப் பரிட்சை விடுமுறையில் தான்…!!!
வெண்பா
ஊழலை முழு நேர பணியாக செய்கிறது திரிணமூல் காங் – பிரதமர் #போட்டிக்கு வர்றாங்களா ஜி
????எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர்க்காரங்க மாதிரியே நடிப்பார் ஜி இப்ப மன்மோகன் சிங் கெட்டப்ல இருக்கார் ????
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை, பெங்களூரு 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் செல்லலாமா? எப்படி?