அண்ணாமலை மணலை கயிறாக திரிக்க முடியாது: திருமாவளவன் காட்டம்!

அரசியல்

அண்ணாமலை மணலை கயிறாக திரிக்கவும் முடியாது பெரியார் சிலையை அகற்றவும் முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலளித்த அவர், “அண்ணாமலை நடைபயணத்தில் கலந்துகொள்பவர்களில் ஒரு சதவிகிதம் கூட பாஜகவினர் இல்லை. அதிமுக, பாஜக தொண்டர்கள் தான் கலந்து கொள்கிறார்கள். அண்ணாமலை பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறுவது மணலை கயிறாக திரிப்பேன் என்ற கூற்றை போன்றது.

அவரால் மணலை கயிறாகவும் திரிக்க முடியாது, பெரியார் சிலையை அகற்றவும் முடியாது. பரபரப்புக்காகவும் ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இப்படி பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பேசமாட்டார். அண்ணாமலையின் வார்த்தைகளால் தமிழக மக்கள்  ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழில் பேசி தீபாவளி வாழ்த்து சொன்ன ஆளுநர் ரவி!

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *