சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (மே 12) நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2024க்கான போட்டிக்களம் இறுதிகட்ட பரபரப்பை எட்டி வருகிறது. போட்டியில் உள்ள 10 அணிகளில் 2 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 2 இடங்களை யார் பிடிப்பது என்பதிலேயே மற்ற 6 அணிகளுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், 5 முறை சாம்பியனாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை எப்போதோ இழந்துவிட்டது என்பதுதான்.
இந்நிலையில், இன்று (மே 11) சூப்பர் சண்டே என்னும் வகையில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
அதில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏற்கனவே பிளே ஆஃப்-க்கு தகுதிப்பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதும் சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்று, அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் நடக்கும் போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
அதேபோல், இதில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவிற்கு அடுத்ததடுத்து உள்ள டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ்ட் போன்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
அந்தவகையில், இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றே ஆகவேண்டும் என மஞ்சள் படையினர் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
சொந்த மண்ணில் மஞ்சள் படை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நேற்றைய போட்டி:
நேற்று (மே 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 9வது தோல்வியாகும்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘அம்மா என்னும் மந்திரமே… அகிலம் யாவும் ஆள்கிறதே…’ : மறக்கமுடியாத நினைவுகள்!
கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்… காரணம் என்ன?