4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று (மே 13) நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்தவகையில், ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ஆந்திரப்பிரதேசம் – 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானா – 17 தொகுதிகளுக்கும், பீகார் – 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் – 4 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா – 11 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் – 8 தொகுதிகளுக்கும், ஒடிசா – 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் – 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் – 8 தொகுதிகளுக்கும் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரிரு தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில், 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, மொத்தமாக 10.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
மேலும், 11 மணி நிலவரப்படி 24.87 சதவீத வாக்குகள் மொத்தமாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மாநிலவாரியாக
- மேற்கு வங்கம் – 51.87%
- மத்தியப் பிரதேசம் – 48.52%
- ஜார்கண்ட் – 43.80%
- தெலுங்கானா – 40.38%
- ஆந்திரப் பிரதேசம் – 40.26%
- உத்தரப் பிரதேசம் – 39.68%
- ஒடிசா – 39.30%
- பீகார் – 34.44%
- மகாராஷ்டிரா – 30.85%
- ஜம்மு – காஷ்மீர் – 23.57%
என மொத்தமாக பிற்பகல் 1 மணிவரை 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்டு திட்டங்கள்!
விஜய்யின் “The GOAT” இசை வெளியீட்டு விழா எங்க தெரியுமா?