சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ஜெர்ஸி மற்றும் தோனி கையெழுத்திட்ட பந்துகள் இன்று (மே 12) வழங்கப்பட்டது.
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 141 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18.2 ஓவர் முடிவில் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சென்னை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தநிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. போட்டி துவங்குவதற்கு முன்பாக, சென்னை அணி ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதாவது, போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்திருந்தது.
இதனால் தோனி தனது ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிட இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில், சென்னை அணி தனது சொந்த மண்ணில் ஆடும் கடைசி லீக் ஆட்டம் என்பதால், ரசிகர்களுக்கு ஜெர்ஸி மற்றும் தோனி கையெழுத்திட்ட பந்துகள் வழங்கப்பட்டது.
மைதானத்தில் இருந்து சென்னை அணி வீரர்கள் ஜெர்ஸி மற்றும் பந்துகளை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டேடியம் நோக்கி வீசினர். ரசிகர்கள் அதனை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிரடி காட்டிய ருதுராஜ்… பிளே ஆஃப் வாய்ப்பை பிரைட் ஆக்கிய சிஎஸ்கே!
கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!