தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆர்.என்.ரவி பேசும்போது, “வணக்கம்…ஒளியின் திருநாளான தீபாவளி திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளுநர் ரவி அவர்கள் மக்களுக்கு விடுக்கும் #தீபாவளி வாழ்த்துச் செய்தி. #Deepawali #Greetings @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @PIB_India @PIBCulture @pibchennai @DDNewsChennai @airnews_Chennai @ANI @PTI_News pic.twitter.com/BMO0j22mC3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 11, 2023
பாரதம் முழுவதும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தர்மத்திற்காகவும், ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நமது சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடு இது. உலகெங்கிலும் உள்ள பாரத மக்கள் மதம்,மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகள் வாங்க வேண்டு என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதற்காக நாம் உறுதிமொழி எடுப்போம். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூரில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு சென்று தொழிலாளர்களின் உழைப்பை நேரில் பார்த்தேன்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்வோம். அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!
ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!