ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு நிறைந்த ஆளுநர் மாளிகை முன்பு அதுவும் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் அங்கிருந்த போலீசார் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயற்சித்த ரவுடி கருக்கா வினோத்தை அங்கேயே போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது தற்போது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
அவர் மீது தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டுவீச்சு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து கருக்கா வினோத் ஜாமீன் பெற முடியாதபடி, ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் : விமர்சனம்!
தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்!