அமெரிக்க அதிபர் இஸ்ரேல் பயணம்!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (அக்டோபர் 18) இஸ்ரேல் செல்ல உள்ளார்.
திமுக ஆலோசனைக் கூட்டம்!
நீட் தேர்விற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற உள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கள ஆய்வு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று 2வது நாளாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து – ஆய்வுக் கூட்டம்!
பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
ஆயுத பூஜை சிறப்பு சந்தை!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை இன்று திறக்க உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 515வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகை ஜோதிகா பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஜோதிகாவின் 45வது பிறந்தநாள் இன்று.
’லேபில்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர்!
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ’லேபில்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் எக் ஆம்லெட்
போய்வா புரட்டாசியே… வா வா ஹை பசியே.: அப்டேட் குமாரு