காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செப்டம்பர் 29) டெல்லியில் நடைபெறுகிறது.
உதகை மலர் கண்காட்சி!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று துவங்குகிறது.
வாச்சாத்தி வழக்கு தீர்ப்பு!
வாச்சாத்தி மலை கிராம மக்கள் மீது வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் கொடூர தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கர்நாடகா முழு அடைப்பு போராட்டம்!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
காவலர்களுக்கு இருதய பரிசோதனை!
உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று முதல் காவலர்களுக்கு இருதய பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆம்னி பேருந்துகளில் ரூ.2000 நோட்டு!
இன்று முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ. 2000 நோட்டுக்கள் வாங்கப்படாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கிங் ஆஃப் கோதா ஓடிடி வெளியீடு!
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கோதா திரைப்படம் இன்று ஹாட் ஸ்டார் ஓ. டி. டி தளத்தில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 496-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் மோதல்!
ஐசிசி உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.