அதிமுக தொண்டர்களும், பாஜகவும் ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புவதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 2 )செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும், பாஜகவும் ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புகிறது என்றார். மேலும், நிதிநிலை குறித்த விரிவான அறிக்கையில் எய்ம்ஸ் குறித்து பதில் இருக்கும் என்று நம்புகிறேன். நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லக்கூடிய சிறப்பான பட்ஜெட்.
அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில வளர்ச்சிக்கு திமுக அரசு பயன்படுத்த வேண்டும். எங்களை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மெரினா கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சுற்றுப்புற ஆய்வாளர்கள், அங்கு இருக்கின்ற மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களிடம் கருத்துகளை கேட்டுள்ளேன், முழுமையான கருத்துகள் கிடைக்கப்பெற்ற உடன் அதிமுக வின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பதானின் இமாலய வசூல்: #Boycott கலாச்சாரத்திற்கான பதிலடி!
மாணவர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து முதல்வர் ஆய்வு!