சன் குழுமத்தின் புது சேனல் “சன் ஹாலிவுட்”?

Published On:

| By Kavi

தொழிலதிபர் கலாநிதி மாறனின் சன் குழுமம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மிக பிரபலமானது.

சன் டிவி, கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் என தமிழ் மக்களின் ஃபேவரைட்டாக இருக்கும் சன் நெட்வொர்க், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மற்ற மாநிலத்திலும் டாப் 10 சேனல்களின் பட்டியலை எடுத்தால் சன் நெட்வொர்க்கின் சேனல்கள் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

தொலைக்காட்சியில் மட்டுமின்றி சன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரித்து பாக்ஸ் ஆபிஸிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது சன் குழுமம்.

இந்நிலையில் அடுத்ததாக சன் குழுமம் ஒரு புதிய சேனலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்த்து ரசிப்பதற்கென ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. ஹாலிவுட் படங்களை ஆங்கிலத்தில் பார்ப்பதை விட தமிழில் மிக நகைச்சுவையான வசனங்களை டப்பிங்கில் சேர்த்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது இளைஞர்கள் மட்டுமின்றி மொத்த குடும்பத்தினரும் அந்த படங்களை பார்த்து ரசிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த பழக்கம் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் உள்ளது.

Image

இதனால் கலாநிதி மாறனின் சன் குழுமம் “சன் ஹாலிவுட்” என்ற ஒரு புதிய சேனலை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

“சன் ஹாலிவுட்” சேனலில் 24 மணி நேரமும் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த “சன் ஹாலிவுட்” சேனல் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியாகவில்லை.

ஆனால் சன் குழுமம் சார்பில் இப்படி ஒரு சேனல் அறிமுகப்படுத்தப்பட்டால் அது நிச்சயம் ஹிட் அடித்து விடும் என்றும் தொடர்ந்து தமிழ் டப்பிங் ஹாலிவுட் படங்களை பார்ப்பது அட்டகாசமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஸ்டார் தொகுதி பார்வை… கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுகவின் கணக்குகள்!

அடுத்த படத்தின் இரட்டை இயக்குநர்களை வாழ்த்திய கமல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share