பழனியில் முருக பக்தர்கள் மாநாடு: விசிட் அடித்த சேகர்பாபு

பழனியில் ஆகஸ்ட் மாதம் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 11) ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் உலக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது என இந்து சமய அறநிலையத்துறை தீர்மானித்தது. இந்த மாநாடானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், முருகன் கோவில் அறங்காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

இந்தநிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று காலை பழனிக்கு சென்றார். அங்கிருந்து ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை வழிபாடு செய்தார்.

அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து கோவிலில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், செயலர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சாதனை நாயகன் ஜேம்ஸ் அண்டர்சன்

தளபதி 69! ரூ.250 கோடி கேட்கும் விஜய்… தயாரிக்கப் போவது யார்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts