பயிற்சி இல்லாதவர்களுக்கு போர்: தப்பியோடும் இளைஞர்கள்!

அரசியல் இந்தியா

போருக்கான பயிற்சியே இல்லாத  தங்கள் பிள்ளைகளை நான்கு நாட்கள் மட்டுமே பயிற்சி கொடுத்து போருக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று போர்முனைக்குச் சென்றுள்ள வீரர்களின் தாய்மார்கள் புதினிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் உள்ள இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியோடும் எண்ணங்களும் வலுத்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரில் தங்களது கணவர்கள் மற்றும் மகன்களைக் கட்டாயப்படுத்தி ராணுவத்துக்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி சி.என்.என் பத்திரிகையின் ரஷ்யாவுக்கான டெலிகிராம் சேனல் பகிர்ந்துள்ள வீடியோவில் ஒரு பெண், “பயிற்சி இல்லாதவர்களுக்கு நான்கு நாட்களே பயிற்சி கொடுத்து, தாக்குதல் குழுவில் சேரும்படி மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கட்டாயப்படுத்தி வருகின்றனர். ஆயுதம் ஏந்திய 100 எதிரி படையினருக்கு எதிராக ஐந்து பேரை அனுப்புகின்றனர்.

பலியாடுகள் போன்று எதிரிகளுக்கு எதிராகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான பீரங்கிகள், வெடி பொருட்களை கொடுத்து அனுப்புங்கள். முறையான பயிற்சியும் இல்லாமல், ஆயுதங்களும் இல்லாமல் சென்றுள்ள அவர்களைத் திரும்ப அழைத்து, அவர்களது கைகளில் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொடுங்கள்” என அதிபர் புதினிடம் அவர் கோரிக்கையாகக் கூறியுள்ளார்.

சி.என்.என் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியால் ரஷ்யர்களில் பலர், அதுவும் இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியோடும் எண்ணங்களும் வலுத்துள்ளன. இதுபற்றி பெயர் வெளியிட விருப்பம் இல்லாத நபர் ஒருவர்,  “ரஷ்யாவை விட்டு நாங்கள் தப்பி ஓடுகிறோம். ஏனெனில் நாங்கள் வாழ விரும்புகிறோம். எங்களையும் உக்ரைனுக்கு அனுப்பி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம்” என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு, வீரர்கள் என கூறி அனுப்பப்படுபவர்களின் குடும்பத்தினர் விமர்சனம் தெரிவித்துள்ளதுடன், நடுத்தர பதவி வகிக்கும் அதிகாரிகளின் சரியான தலைமைத்துவம் இன்மை, தேவையான போதிய பயிற்சி கிடைக்க பெறாமை, போதிய சீருடைகள் இல்லாமை, தரமில்லாத உணவு மற்றும் மருந்து பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட தளவாட பொருட்களும் கிடைக்காத சூழல் ஆகியவற்றையும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

ராஜ்

பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *