ஜெயக்குமார் மரணம்: ப.சிதம்பரம் நேரில் ஆறுதல்!

Published On:

| By indhu

Jeyakumar's death: P. Chidambaram consoled in person!

மறைந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் சகோதரர் செல்வராஜை அவரது இல்லத்தில் சந்தித்து இன்று (மே 11) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் கூறினார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவரை காணவில்லை என கடந்த மே 2 ஆம் தேதி அவரது மகன் உவரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமார் தனசிங் மே 4ஆம் தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அவரை கொன்றுவிட்டு, எரித்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் சகோதரர் செல்வராஜை அவரது இல்லத்தில் இன்று (மே 11) நேரில் சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் கூறினார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Diamond League 2024: 2 செ.மீ-ல் தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா

உயிர் தமிழுக்கு : விமர்சனம்!