இன்னைக்கு காலையில டீக்கடைக்கு போயிருந்தேன்…
கடை முன்னாடி ஒரு பெரிய பேனர் வச்சிருந்தாங்க…. என்னன்னு பார்த்தா ஒரு டீ வாங்குனா சம்மர் ஆஃபர்ல 5 ரூபா தள்ளுபடின்னு போட்ருந்தாங்க…
நானும் என் ஃபிரண்டும் இரண்டு டீ வாங்கி குடிச்சிட்டு பில் பே பண்ண போயிருந்தோம்…
அப்போம் கடைக்கார அண்ணன்கிட்ட, “அண்ணா 2 டீ குடிச்சிருக்கோம். 10 ரூபா தள்ளுபடி தானன்னு” கேட்டேன்
அதுக்கு அவரு, “தம்பி, பேனர ஒழுங்கா படிச்சியா… அதுல என்ன போட்ருக்கு 11 மணியில இருந்து சாயந்தரம் 4 மணி வரை மட்டும் தான் இந்த ஆஃபர்ன்னு” சொன்னாப்ல…
இதுக்கு நம்ம நண்பர், “நல்லா இருக்குயா உங்க பிஸினஸ் டாக்டீஸ்ன்னு” கமெண்ட் அடிச்சாப்ல…
உடனே நாங்க பில்ல பே பண்ணிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
mohanram.ko
அட்சய திருதியை க்கு, நகை வாங்குறாங்கன்னு நகைக்கடை வச்சிருக்கிற நான் சந்தோஷமா இருக்கேன்.. நீ ஏன்டா சந்தோசமா இருக்க…?
நான் அடகு கடை வச்சிருக்கேன் ணே
ச ப் பா ணி
சம்மர் டூர் போய்ட்டு வந்ததில் நீங்காத நினைவில் இருப்பது கடன் தான்
Mannar & company
மழைக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுக்கிற மாதிரி வெயிலுக்கு சிக்னலுக்கு சிக்னல் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது!
butterfly.
ஓடி ஓடி உழைக்கனும்
அடுத்து என்ன ஊருக்கெல்லாம் குடுக்கணுமா
Emi க்கே பத்தமாட்டிங்குது வாத்தியாரே
கடைநிலை ஊழியன்
me to 2024 – அதுக்குள்ள மே மாசம் வந்துருச்சு.. இவ்ளோ வேகமா போனா என்ன அர்த்தம்..
2024 to me – சரி, slow வா போனா என்ன பண்ணிருப்ப.. ?
me – ஒன்னும் பண்ணிருக்க மாட்டேன்..
ச ப் பா ணி
ஆபிசில் அமைதியாய் இருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு அமைதிப்படை அமாவாசை ஒளிந்திருப்பான்
Sasikumar J
அட்சய திருதியை ஒட்டி, ஒரே நாளில் ₹14,000 கோடி தங்கம் விற்பனை!
காசு பணம் இல்லைன்னு சொல்றீங்க நகை வாங்க மட்டும் எப்படி தான் காசு வந்துச்சு இவ்வளவு நாளா அந்த காசு எங்கடா வச்சிருந்தீங்க..!
எனக்கொரு டவுட்டு!?
லால் ஸலாம் படத்துல முக்கியமான புட்டேஜ் காணாம போன மாதிரிதான் நம்ம வாழ்க்கைல சந்தோசங்குற முக்கியமான புட்டேஜ் காணாம போயிருச்சு…
ArulrajArun
Protein Powder-ஆல் உடலுக்கு ஆபத்து – ICMR எச்சரிக்கை
#இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
பழனியில் முருக பக்தர்கள் மாநாடு: விசிட் அடித்த சேகர்பாபு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சாதனை நாயகன் ஜேம்ஸ் அண்டர்சன்