திருச்சி மாநாடு: சசிகலாவுக்கு அழைப்பா? – ஓபிஎஸ் பதில்!

அரசியல்

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும், அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு நடத்தி தனது தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவாகவும், அதிமுகவின் 50-ஆவது ஆண்டு விழாவாகவும் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் இந்த விழாவில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள். அன்வர் ராஜா, கேசி பழனிசாமி போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்” என்றவரிடம்

சசிகலா இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும். அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்” என்றார்.

செல்வம்

பிற மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு: அமித்ஷாவிற்கு முதல்வர் கடிதம்!

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் தனுஷின் வுண்டர்பார்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *