சில நாட்களாய் காணாமல் போன, காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக இன்று (மே 4) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை , மேலும் அவரது போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதற்கு இவர்கள் தான் காரணம் என்றும் பட்டியலிட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு ஜெயக்குமார் கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக முதன் முதலில் இன்று (மே 4) காலை மின்னம்பலத்தில், ‘காணாமல் போன காங்கிரஸ் தலைவர்… எஸ்.பி.க்கு அனுப்பிய மரண சாசனம்! நெல்லையில் என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் மாயமான ஜெயக்குமார் தனசிங் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தென் மாவட்டம் முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மே 2ஆம் தேதி முதல் ஜெயக்குமார் தன்சிங்கை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் அவரது மகன் புகாரளித்திருந்தார்.
தற்போது அவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏற்காடு சாலை விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்!
தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் நிர்வாகிகள் கைது : சீமான் கண்டனம்!