ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலிவீடியோக்கள் உருவாக்கப்படுவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி திரை பிரபலங்கள் வரை பலரையும் சித்தரித்து வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வைரலாக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி தமிழ் சினிமா பாடல்களை பாடுவது போல் வீடியோக்கள் வெளியாகின. அதைதொடர்ந்து அவர், பெண்களுடன் கர்பா நடனம் ஆடுவது போன்று நேற்று இணையத்தில் வீடியோ வெளியானது.
இதுதொடர்பாக டெல்லி பாஜக அலுவலகத்தில் இன்று நடந்த தீபாவளி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நான் கர்பா நடனம் ஆடியது போன்று இணையத்தில் வீடியோவை பார்த்தேன். இதுபோன்று பல வீடியோக்கள் வருகின்றன. பள்ளி பருவம் முதலே நான் கர்பா நடனம் ஆடியதில்லை.
இவ்வாறாக சித்தரித்து வீடியோ வெளியிடப்படுவது கவலை அளிக்கிறது. டீப்ஃபேக் வீடியோ குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசியிருக்கிறேன்.
ஊடகங்கள் டீப்ஃபேக் வீடியோ குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம்” என்று எச்சரித்தார்.
முன்னதாக ராஷ்மிகா மந்தானாவின் டீப்ஃபேக் வீடியோ வைரலான போது, இதுபோன்று வீடியோ எடிட் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
பிரியா
அனைத்து கார்களையும் வாடகைக்கு இயக்கலாம்: போக்குவரத்து துறை அனுமதி!
சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: அமைச்சர் எ.வ.வேலு
WorldCup2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மாற்று வீரரை களமிறக்கும் ரோஹித்?