இன்னும் ரயில் விபத்துக்கள் நடக்கும்: ஹெச்.ராஜா திடுக்!

அரசியல்

ஒடிசா ரயில் விபத்து போலவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பா ஜ க மூத்த தலைவர் ஹெச். ராஜா இன்று (ஜூன் 7) சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“ தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை எந்த ஒரு பொது காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தி மு க அரசு கோயில் நிலங்களை விற்க திட்டமிட்டு வருகிறது. கோயில் நிலங்களை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நீதிமன்ற உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா ஜ க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு தனது அமைச்சர் பதவியை தொடர கூடாது.

அவருக்கு பதிலாக கே. என். நேருவை அறநிலைய துறை அமைச்சராக நியமிக்கலாம். அவர் நல்ல வைஷ்ணவர்.

அவர் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார். மாநில கல்வி தரத்தில் குறைபாடு உள்ளது. எனவே அது தொடர்பாக ஆளுநர் பேசியதில் தவறில்லை” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்லவில்லை.

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள் ஏன் கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை? தமிழக டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கின்றனர்.

அனிதா உயிரிழந்த போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பின்னர் மொத்த டாஸ்மாக்கையும் மனிதாபிமான அடிப்படையில் மூடியிருக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகளை செய்து இந்த ரயில் விபத்து போலவே இன்னும் பல விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஹெச். ராஜா கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

புதிய கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்? சிக்கலில் காங்கிரஸ்

கைவசம் அரை டஜன் படங்கள்: குஷியில் குந்தவை

ஒரே இன்னிங்ஸில் 903 ரன்கள்… கதிகலங்க வைக்கும் ஓவல் மைதான ரெக்கார்ட்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!

More train accidents will happen
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *