நடிகர் தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு பட அப்டேட் குறித்த அறிவிப்பை இன்று (ஏப்ரல் 9) வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, பின்னணி பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என்ற பன்முக அடையாளம் கொண்ட இவர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தினை அறிவித்தார். அதன் முதல் படமாக 2012ஆம் ஆண்டு அவர் நடிப்பிலேயே உருவான ’3’ வெளிவந்தது.
அதன்பிறகு எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்காமுட்டை, நானும் ரெளடிதான், மாரி, காலா, வடசென்னை உள்ளிட்ட வெற்றிபடங்களை தனுஷ் தயாரித்தார்.
எனினும் கடந்த 2018ம் ஆண்டில் கடைசியாக வெளிவந்த மாரி 2 திரைப்படத்திற்கு பிறகு வுண்டர்பார் வேறு படங்களை தயாரிக்கவில்லை.

சில படங்களில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சில நிர்வாகிகளின் கையாடல் போன்ற காரணங்களால் கடந்த 4 வருடங்களாக வுண்டர்பார் நிறுவனம் எந்த படங்களையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதன்படி வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு அப்டேட் அறிவிக்கப்படும் என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது.
எனினும் இப்போது கொடுத்துள்ள அறிவிப்பு எந்த படத்திற்கான அப்டேட் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ரொனோல்டோவின் இமாலய சாதனையை முறியடித்த மெஸ்ஸி
பிற மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு: அமித்ஷாவிற்கு முதல்வர் கடிதம்!