கே.ஜி.எஃப் 1&2 படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் மாஸ் ஹீரோவாக இடம் பிடித்தவர் கன்னட நடிகர் யாஷ்.
கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதி காட்சியில் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்திற்கான லீட் இருந்ததால் அடுத்து நடிகர் யாஷ் கே.ஜி.எஃப் 3 படத்தில் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து யாஷின் 19 வது படத்திற்கு “Toxic” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாலிவுட் நடிகை கரீனா கபூரும் TOXIC படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது TOXIC படக்குழு நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் நடிகர் யாஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவை இயக்குநர் கீத்து மோகன்தாஸ் அணுகியதாகவும், படத்தின் கதையை கேட்ட நயன்தாரா, TOXIC படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் என்றும், இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான மூத்தோன் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதால், TOXIC படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டி20க்கான இந்திய அணியில் நடராஜனுக்கு இடமில்லையா? ஷேன் வாட்சன் ஓபன் டாக்!
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு: எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?