சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
https://twitter.com/policecbecity/status/1786611182503334326
அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காணாமல் போன காங்கிரஸ் தலைவர்… எஸ்.பி.க்கு அனுப்பிய மரண வாக்குமூலம்! நெல்லையில் என்ன நடக்கிறது?
வேலைவாய்ப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் பணி!