ஆண்டு முழுவதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT சந்தாவை இலவசமாகப் பெற ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனத்தின் 28 நாட்கள் வேலிடிட்டி ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்தால் மட்டும் போதும். ஆம்…
ஜியோவின் புதிய அதிரடி ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இலவசங்களையும், அதிக சலுகைகளையும் வழங்குவதால் பல
கோடிக்கணக்கான பயனர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில்
ரிலையன்ஸ் ஜியோ அதிக பயனர்களைக் கொண்டுள்ளது.மேலும், தனக்கென ஒரு தனி அடையாளத்தை
உருவாக்கியதோடு இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது.
தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் வகையில் சிறப்பு விலையில் ரீசார்ஜ்
பிளான்களையும் எண்ணற்ற திட்டங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
குறிப்பிடப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு OTT சேவைகளின் சந்தாவைப் பயனர்களுக்கு
இலவசமாக வழங்குகிறது. இப்பொழுது அதிரவைக்கும் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி
பயனர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு OTT சேவைகளின் பலனை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த விரும்புவோருக்கு
விலை உயர்ந்த ரீசார்ஜ் திட்டத்தையே பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால், இப்பொழுது
அப்படியான ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது இல்லை.
ஆண்டு முழுவதும் பிரபலமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT யை பார்த்து ரசிக்கலாம். இவை 28 நாட்கள்
வேலிடிட்டி கொண்ட பிளானை ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதுமானது. ஜியோவின் புதிய திட்டத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆண்டு முழுவதற்குமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவசம்.
மேலும், இத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள்…
வெறும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு சூப்பர் ரீசார்ஜ் திட்டம் ஜியோ வால்
இதற்காக வழங்கப்படுகிறது. இந்த மலிவான ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதற்குமான
டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புச் சலுகை திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீமியம் திட்டம் விலை 598 ரூபாய்.
திட்டத்தின் ரீசார்ஜ் இணை தேர்ந்தெடுத்தால் பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டாவை பெறுவார்கள்.
அதாவது இந்த திட்டத்தில் 56ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அனைத்து நெட்வொர்க்கும் வரம்பற்ற அழைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் பெறுதல் வசதிகளும் உண்டு. பயனர்கள் தினசரி 100 SMS அனுப்பும் வாய்ப்புகளும் பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
கே.ஜெகதீஸ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
LCU: லோகேஷின் ஷார்ட் பிலிம்.. டைட்டில் இதுதான்!