எம்.ஜி.ஆர் பாடும், ‘மலரே மௌனமா…’ வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ

சினிமா

தமிழ் சினிமா உலகின் முடிசூடிய மன்னனாக திகழ்பவர் எம்.ஜி.ஆர்.  அவர் திரைப்படத்தின் பல பாடல்கள் இன்றுவரை அவற்றின் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் பெயரையெல்லாம் தாண்டி, எம்.ஜி.ஆர். பாடல்களாகவே அறியப்படுகின்றன.

ஆனால் எம்.ஜிஆர் பாட்டையே வைரமுத்து பாட்டாக மாற்றியிருக்கிறது தொழில் நுட்பம்.

இன்று (மே 17) காலை கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதில், அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆரும் பானுமதியும் பாடும், ‘மாசிலா உண்மை காதலே… மாறுமோ செல்வம் வந்த போதிலே…’ என்ற பாடலின் காட்சிக்கு… ‘மலரே மௌனமா… மௌனமே வேதமா..’ என்று அர்ஜுன் -ரஞ்சிதா நடித்த கர்ணா படத்தின் பாடலை மிகக் கச்சிதமாக பொருத்தியிருக்கிறார்கள்.

அந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் வைரமுத்து,

”எங்கிருந்தோ எனக்கொரு பாடல் வந்தது. வியந்தும் மகிழ்ந்தும் போனேன்.  அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த புகழ்பெற்ற பாடல் காட்சியோடு நான் எழுதிய பாடல் ஒன்றைப் பொருத்தியிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆருக்குப் பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தொழில்நுட்பத்தால் தீர்ந்தது.
ஆனால், வேறொரு குறை வந்துவிட்டது. இதைக் கண்டு களிப்பதற்கு எம்.ஜி.ஆரும் பானுமதியும் இன்றில்லையே” என்று குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.

இந்த வீடியோவை பாருங்களேன்… எம்.ஜி.ஆர். -பானுமதியின் நடிப்புக்கும் நடனத்துக்கும்…  வித்யாசகர் இசையமைத்து வைரமுத்து எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஜானகி பாடிய மலரே மௌனமா பாடல், எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

“ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்”: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்!

“நாட்டின் வளர்ச்சியை பாருங்கள்” : ராஷ்மிகா வீடியோ – மோடி ரியாக்‌ஷன்!!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *