share market: இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்!

Published On:

| By Aara

நேற்று ( மே16) சென்செக்ஸ் 676.69 புள்ளிகள் உயர்ந்து 73,663.72 ஆகவும், நிஃப்டி   203 புள்ளிகள் அதிகரித்து 22,403.85 ஆகவும் முடிவடைந்தது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் ஏறக்குறைய ஒரு சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய வர்த்தகத்தில் ஃபாரின் ஃபோர்ட்போலியோ இன்வெஸ்டர்ஸ்  776 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர் .

பயோகான் லிமிடெட் நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 57% சரிந்து 135 கோடியாக உள்ளதாகவும் , இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் நிகர லாபம் 313 கோடியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

நான்காவது காலாண்டில் ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் 180 கோடி நிகர லாபம் ஈட்டியதாகவும், செயல்பாடுகளின் வருவாய் மூலமாக 575 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் திரிவேணி டர்பைன் ரூ.76 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நார்வேயின் நோர்ஜஸ் வங்கி, தனது முலீட்டு பட்டியலில் இருந்து அதானி போர்ட் நிறுவன பங்குகளை விலக்க முடிவு செய்துள்ளது. இது இன்றைய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் இங்கிலாந்தின் ஆன்லைன் பேஷன் சில்லறை விற்பனையாளரான ASOS உடன் நீண்ட கால ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 7,675 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்தது.

நேற்று ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், மேலும் வாராந்திர வேலையின்மை புள்ளிவிவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க சந்தை வீழ்ச்சியுடன் முடிவடைந்ததால் . இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று வெள்ளிக்கிழமை ஏற்ற இறக்கத்துடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் இவைதான்…

இன்றைய காலை வர்த்தகத்தில் நிஃப்டி 11.40 புள்ளிகள் உயர்ந்து 22,415.25 புள்ளியிலும், சென்செக்ஸ் 47.59 புள்ளிகள் அதிகரித்து 73,711.31 புள்ளியிலும் தொடங்கியது.

இன்று  JSW ஸ்டீல், பந்தன் வங்கி, கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஃபைசர், NHPC, டெல்லிவரி, பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், பல்ராம்பூர் சினி மில்ஸ், க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உள்ளிட 116 நிறுவனங்கள் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் என பங்குச் சந்தை நிபுணர்கள் HAL, Oberoi Realty, Titagarh, Bluestar, NCC, பார்தி ஏர்டெல், எஸ்கார்ட்ஸ் குபோடா மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள்.

இன்று Balrampur Chini Mills, Bandhan Bank, Biocon, Birlasoft, Granules, GMR Infra, Granules, Hindustan Copper, Vodafone Idea, Piramal Enterprises, Sail, India Cement, Zee Entertainment Enterprise ஆகிய நிறுவனங்களின் பங்குகளை F&O வர்த்தகத்தில் இணைத்துள்ளது NSE.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

மோடி விஷத்தை கக்குகிறார்… தென்னிந்திய கட்சிகளை பற்றி பேசியதற்கு சித்தராமையா பதிலடி!

Paris Olympics 2024: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு – யார் யாருக்கு இடம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel