Govi Lenin japan travel story 10 earthquake in japan

உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10

சிறப்புக் கட்டுரை

Govi Lenin japan travel story 10 earthquake in japan

கோவி.லெனின்

சுமிதா என்ற அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்தபோது, சின்னச் சின்ன அலைகளுடன் நிறைந்தோடிக் கொண்டிருந்தது ஆறு. அதன் பேருதான், சுமிதா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குள் 22 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஓடி, டோக்கியோ குடா எனப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் கலக்கிறது. 22 கிலோமீட்டரில் 21 பாலங்கள் குறுக்கிடுகின்றன. அரக்கவா ஆற்றின் கிளை ஆறுதான், சுமிதா.

“நானும் இங்கேதான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என்றது அரக்கவா. டோக்கியோ நகரத்தின் மையப் பகுதியில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது அரக்கவாவை நன்றாக ரசிக்க முடிந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்த ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கரைகளை உயர்த்தியும், வடிகால்களை ஏற்படுத்தியும், நீரை மாற்றுப் பாதைகளில் அனுப்பிய நிலையிலும், அரக்கவாவில் நீரோட்டம் நிறைந்தே இருந்தது. கவா என்றாலே ஜப்பானிய மொழியில் ஆறுதான். “அர ஆறு என்றே சொல்லலாம்” என்றது அரக்கவா.

ஆறு பேசுமா என்று கேட்காதீர்கள். உரக்கப் பேசும் இயற்கையை, ஆவேசமாகப் பேசும் இயற்கையை நாம் ஜப்பானில் பார்க்கவும் கேட்கவும் முடியும். இந்த 2024 புத்தாண்டு நாளில் மேற்கு ஜப்பான் பகுதியில் பூமித்தாய் ஆவேசமுடன் பேசிய குரல் உலகம் முழுக்க கேட்டதா இல்லையா? ஆம்.. அங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தைத்தான் சொல்கிறேன். அது பூமித்தாயின் ஆவேசமான குரல்தான்.

ஜப்பானியர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப அறிவில் எந்தளவுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அதே அளவுக்கு இயற்கை மீதான ஆர்வத்தையும் அறிவையும் காண முடிகிறது. இயற்கையை எதிர்த்து வாழ்வதில்லை. அறிவியலைப் புறக்கணித்தும் வாழ்வதில்லை. இயற்கையை எதிர்கொண்டு வாழும் ஆற்றலாக அறிவியலைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள்.

டிசம்பர் 26 அன்று தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி நினைவு நாள், கடல் நீர் போன்ற கண்ணீருடன் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆனாலும் உப்பு கரிக்கிறது அந்த நாளின் கொடும் நினைவுகள்.

2004 டிசம்பர் 26 காலையில், ”கடல் பொங்கிடிச்சி” என்ற அலறல்தான் சென்னை முதல் குமரி வரையிலான கடலோரப் பகுதிகளில் கேட்டது. கொத்துக் கொத்தாக கடலோரத்தில் மக்கள் செத்துக் கிடந்தார்கள். மெரினா, வேளாங்கண்ணி மாதா கோயில், பிச்சாவரம் மீனவர் கிராமங்கள் என எங்கும் மனித உடல்கள். ‘கடல் பொங்கிடிச்சி’ என்று கதறிய அந்த நாளைத்தான், சுனாமி நினைவு தினம் என பேனர் வைத்தும், போஸ்டர் அடித்தும் அஞ்சலி செலுத்துகிறோம்.

சுனாமி என்பதே ஜப்பானிய மொழிக்குரிய சொல்தான். 2004 டிசம்பர் 24க்குப் பிறகுதான் அது தமிழ்நாட்டில் புழக்கத்திற்கு வந்தது. பிறகு, சுனாமி தமிழில் ஆழிப்பேரலை ஆனது. நிலநடுக்கம் போல சுனாமியும் ஜப்பானியர்களுக்கு இயல்பானது.

இந்தோனேஷியாவின் ஜகார்ட்டா தீவுகளில் காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை வரை உணரப்பட்ட, அடுத்த ஒன்றரை மணிநேரத்தில்தான் அந்தமான் நிகோபர் தீவுகளின் இந்திரா முனை முதல் குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வரை வங்காள விரிகுடாவின் கடலோரப் பகுதிகளை வரிசையாகத் தாக்கியது சுனாமி. இந்திய கடல் எல்லையைத் தொடுவதற்கு முன் இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை ஆகியவற்றையும் கடுமையாகப் பதம் பார்த்திருந்தது.

நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு உயர்ந்தால் சுனாமியை எதிர்கொள்ளத் தயாராகிவிடுவார்கள் ஜப்பானியர்கள். இந்த முறை நிலநடுக்கத்தின் அளவு 7.8 ரிக்டர். 1984ல் ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஒரு இலட்சம் பேர் உயிரிழந்தனர்.

2011ல் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டபோது உயிர்ப்பலி 20ஆயிரம் பேர். இப்போது ஏறத்தாழ நூறு பேர். இயற்கை சீற்றத்தைத் தடுக்க முடியாது என்றாலூம் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் ஜப்பானின் நவீனக் கட்டமைப்பு மேலோங்கியுள்ளது.

பூமித்தாய் அதிர்ந்து சிரிப்பதும், அதைத் தொடர்ந்து, கடல்கன்னி பொங்கிச் சிரிப்பதும் அங்கே வழக்கமாகிவிட்டது. இதனைத் துல்லியமாக உணர்ந்திருக்கும் ஜப்பானியர்களின் வீடுகள், இயற்கையின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்கும் வகையில் உள்ளன. கான்க்ரீட் வீடாக இருந்தாலும், கூரை உள்பட பலவும் மரப்பலகைகள்தான்.

இயற்கை தரும் முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளைப் புரிந்து கொண்டு, பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்று விடுகிறார்கள். ஜப்பானின் மேற்குப் பகுதியாக இருந்தாலும், கிழக்குப் பகுதியாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் வீடுகளின் தன்மை, இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ளக் கூடிய அளவில் இருக்கிறது.

Govi Lenin japan travel story 10 earthquake in japan

 

திராவிட இயக்கப் பதிவாளர் காஞ்சிபுரம் அருள்பிரகாசத்தின் சகோதரர் கோவலன் டோக்கியோவில் இருக்கிறார். நாங்கள் தங்கியிருந்த நிஷி கசாய் ஸ்மைலி ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான் அவருடைய வீடு. போர்டிகோவில் ஒரு கார் நிறுத்துவதற்கு கச்சிதமான இடம்.

கதவைத் திறந்தால் ஒரு சிறு கூடம். சின்ன அறை. பக்கவாட்டிலேயே மரப்படிக்கட்டு. அதில் ஏறிச் சென்றால், வீட்டின் கூடம், படுக்கை அறை, சமையலறை, டைனிங் டேபிள் என அளவெடுத்து செய்ததுபோல இருந்தது. அறைகளுக்கானத் தடுப்புகளும் பெரும்பாலும் மரத்தாலானவை.

அறையிலும், கிச்சனிலும் எல்லாமே நவீனத் தொழில்நுட்பம்தான். அதனால், அதிக இடவசதி தேவையிருப்பதில்லை. இருக்கின்ற இடத்தில் எல்லாவற்றையும் அனுபவிக்கத் தெரிந்தவர்களாக ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் தேவாலயம் சென்றிருந்தார் கோவலனின் வாழ்விணையர். அவர் இந்தோனேஷியாகாரர். அந்த நாட்டு வழக்கப்படி அவர் செய்து வைத்துவிட்டுச் சென்றிருந்த சிக்கன் கிரேவியை பரிமாறினார் கோவலன்.

Govi Lenin japan travel story 10 earthquake in japan

“கொஞ்சம் காரமா இருக்கும்”-வைக்கும்போதே சிக்னல் கொடுத்தார்.

“நாங்க எல்லாம் ஆந்திரா மெஸ் மொளகாயையே அள்ளிக் கட்டுனவங்க” என்றேன்.

“இது கொஞ்சம் காரமா இருக்கும்” என்று மறுபடியும் சொன்னார் கோவலன்.

முறை மாமன் படத்தில், குஷ்புவுக்கு செந்தில் கொண்டு செல்லும், பேதி மாத்திரை கலந்த பாலை அசால்ட்டாக குடிக்கும் கவுண்டமணி போல, இந்தோனேஷியா சிக்கனை ஒரு கட்டுக் கட்டினேன்.

கண்கள் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. காது புகை கக்கியது.

(விரியும்  வரும் ஞாயிறு அன்று)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு

Govi Lenin japan travel story 10 earthquake in japan

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9

உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1

Govi Lenin japan travel story 10 earthquake in japan

+1
1
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *