நெல்லை பேருந்து நிலையத்தில் படிப்படியாக வடியும் வெள்ளம்!

Published On:

| By Selvam

tirunelveli rain drain

நெல்லை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தேங்கியிருந்த மழை நீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு, பேச்சுப்பாறை அணைகள் நிரம்பியுள்ளதால்  ஆற்றின் கரையோரம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 235  நிவாரண முகாம்களில் 2000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையின் காரணமாக, நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.

இதனால் பல பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. நேற்று மதியம் முதல் லேசான மழை பெய்து வருவதால் வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருகிறது. பேருந்து நிலையத்திற்கு வெளியே தேங்கியுள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மிதந்து காணப்படுகிறது. இதுவரை அந்த உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை.

அதேபோல, நெல்லை ரயில் நிலையத்தில் 5 அடிக்கு தண்ணீர் தேங்கி தண்டவாளங்கள் மூழ்கியிருந்த நிலையில் படிப்படியாக வெள்ளம் வடிந்து வருகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும் அத்திப்பட்டு அனல்மின் நிலையம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: என்றும் இளமைக்கு முக்கியமான ‘மூன்று’ விஷயங்கள்!

எதை நோக்கிச் செல்கிறது இஸ்ரேலிய-பாலஸ்தீனப் போர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel