ஐபிஎல் போட்டியில் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் பிளே ஆஃப் தகுதி சுற்றை உறுதி செய்யும் போட்டியில், சிஎஸ்கே அணியுடன் மோதிய பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி, தனது அதிரடி ஆட்டத்தால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
சிஎஸ்கே வெற்றிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூமில் பெங்களூரு அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லும் அவர்களுடன் இணைந்தார். அனைத்து வீரர்களையும் ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
அப்போது ”இந்த சீசனில் எத்தனை சிக்ஸர்கள் விளாசினீர்கள்” என்று கோலியிடம் கெய்ல் கேள்வி எழுப்பினார். சிரித்துக்கொண்டே பதிலளித்த கோலி, “37” என்றார். தொடர்ந்து இருவரும் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், “அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடரில் நீங்கள் ஆர்சிபி அணிக்காக திரும்பவும் விளையாட வேண்டும்” என்று கெய்லிடம் கோலி வேண்டுகோள் வைத்தார்.
இந்த வீடியோ காட்சிகளை ஆர்சிபி அணி தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை: காய்ச்சலால் 52 பேர் மருத்துவமனையில் அனுமதி!
‘SSHP’ விமர்சனம் – ஒரு ஒரிஜினல் ’ட்ரெண்ட்செட்டர்’!