சங்கி நண்பர் ஒருத்தர் இன்னைக்கு கால் பண்ணியிருந்தார். எலக்ஷன்லாம் எப்படி போகுதுன்னு கேட்டபோது, “மறுபடியும் மோடி பிரதமரா வருவாருன்னு” அடிச்சி சொன்னாப்ல..
“சரி… 16 வயசு சின்னப்பையன் பாஜகவுக்கு எட்டு ஓட்டு போட்ட வீடியோ உங்களுக்கு அனுப்புனேன் பார்த்தீங்களான்னு” கேட்டேன்…
“எட்டு ஓட்டு ரொம்ப கம்மிங்க… பாஜகவுக்கு 20 ஓட்டு போட்டாலும் தப்பில்ல… அந்த அளவுக்கு மக்களுக்கு நல்ல திட்டம் பண்ணிருக்காங்கன்னு” சொன்னாப்ல…
“நண்பா… அந்த பையன கைது பண்ணிட்டாங்க, தெரியுமா?ன்னு” கேட்டேன்…
போன் சிக்னல் கிடைக்கல, அப்பறமா கூப்புடுறேன்னு எஸ்கேப் ஆகிட்டாப்ல..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
எவ்வளவு தாண்டா பணம் வச்சுருப்பீங்க.. ஸ்கூல் பீஸும் கட்டி, மாசம் முழுக்க டூரும் சுத்துறீங்க

கோழியின் கிறுக்கல்!
எனக்கு புரியாத கேள்விகள் கேட்பதில் என்னவள் ஒரு, நீட் தேர்வு!!

ச ப் பா ணி
Browsing history யை அழிப்பது தான் வரலாற்றுத் தருணம்

கோழியின் கிறுக்கல்!
இப்பெல்லாம் புயல், மழை கூட எப்ப வரும்னு சரியா சொல்லிடுறாங்க, ஆனா வீட்டம்மாக்கு கோபம் எப்ப வருதுன்னு சொல்லி முடியல!!

Mannar & company™
நகர வாழ்க்கைக்குப்பிறகு கிராமத்தில் போய் செட்டில் ஆகிடணும்னு நினைக்கிற சில மனிதர்கள் மாதிரிதான், நகரத்தில் ஓடுன பேருந்துகளும், கிராமப்புறங்களுக்குப் போய்விடுகின்றன!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
” தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்” – பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பேட்டி # ஜெயிச்சா சினிமாவை விட்டு விலகுறேன்னு நீ சொன்னதை நாங்க ஒத்துக்கறோம் அதே மாதிரி தோத்தா அரசியலை விட்டு விலகிறனும்னு நாங்க சொல்லுவோம் அதை நீ ஒத்துக்கனும்.. சரியா..?

ச ப் பா ணி
கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் என்பது பஞ்சர் கடை பக்கத்துல டயர் பஞ்சராவது

சரவணன். ????
எதுக்குண்ணே அவனை மட்டும் அடிக்கிறீங்க? பூத்ல எல்லோரும் எட்டு ஓட்டு போட்டிருக்காங்க.. ஆனா அவன் மட்டும் நாலு ஓட்டு தான் போட்டிருக்கான்.
லாக் ஆஃப்