டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மோடி பிரச்சாரம்!

பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 28) கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மின்சார ரயில்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை, ஹைதராபாத் அணிகள்  மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மிளகு சாகுபடி கருத்தரங்கு!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பொள்ளாச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேர்ச்சொல் இலக்கிய விருது!

நீலம் பண்பாட்டு மையத்தின் வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை ராஜரத்தினம் கலை அரங்கில் இன்று நடைபெறுகிறது.

இன்றைய ஐபிஎல் போட்டி!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத், பெங்களூரு அணிகளும், மற்றொரு போட்டியில் சென்னை, ஹைதராபாத் அணிகளும் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 44-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உற்சவ சாந்தியுடன் இன்று நிறைவடைகிறது.

டென்னிஸ் போட்டி!

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்சு வீரர் ஹம்பர்ட், ஜெர்மனியை சேர்ந்த ஜேன் லென்னார்டு ஸ்ட்ரஃப் உடன் இன்று மோதுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: மாம்பழம் வாங்கப் போறீங்களா… இதை கவனிங்க!

ஆ.ராசா தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு… திக் திக் 20 நிமிடங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *